வெனிசுலா அதிபர் சாவேஸ்- பிடல் காஸ்ட்ரோ இணைந்து கலக்கும் புதிய புத்தகம்

Subscribe to Oneindia Tamil

Fidel Castro and Hugo Chavez
ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பற்றி இணையதளங்களில் உலா வரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிடல் காஸ்ட்ரோவும் வெனிசுலா அதிபர் சாவேஸூம் இணைந்து புதிய புத்தகம் ஒன்றை எழுதி வருகின்றனராம்.

கியூபா புரட்சியாளரும் முன்னாள் அதிபருமான காஸ்ட்ரோவின் உடல்நிலை படுமோசமடைந்துவிட்டது என்றும் அவர் இறந்தேபோய்விட்டதாகவும் அமெரிக்க ஆதரவு குழுவினர் இணையதளங்களில் வதந்திகளைப் பரப்பி வந்த நிலையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதேபோல் அசாஞ்சே விவகாரத்தில்ஈகுவடாரின் நிலைப்பாடு வரை அனைத்து விவகாரங்களையும் காஸ்ட்ரோ உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13-ந் தேதியன்று 86 வயதை எட்டிய காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை கியூபாவின் அதிபராக இருந்தார். 2006-ம் ஆண்டு அவர் அதிபர் பொறுப்பில் இருந்து தம்மை விட்டுவித்துக் கொண்டார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ இப்போது கியூபாவின் அதிபராக இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+