For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஹாரி பாட்டர்' ஜே.கே.ரோலிங்கும் 'போர்ன்' புத்தகத்தில் புகுந்தார்!

Google Oneindia Tamil News

JK Rowling
லண்டன்: இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இ.எல். ஜேம்ஸ் எழுதிய 'Fifty Shades of Grey' நூல் சக்கை போடு போட்டு வரும் நிலையில், அவரது பாணியில், பிரபல இங்கிலாந்து எழுத்தாளரான ஜே.கே.ரோலிங்கும் ஒரு வயது வந்தோருக்கான நூலை எழுதி களம் இறக்குகிறார். இதை அமெரிக்காவில் அவரே நேரடியாக வெளியிடப் போகிறார்.

ஹாரி பாட்டர் கதைகள் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ரோலிங். இவரது நூல்கள்தான் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பின, பெரும் வசூலைக் குவித்து உலக சாதனையும் படைத்தார். இந்த சாதனையைத்தான் தற்போது இ.எல்.ஜேம்ஸின் போர்ன் நூலான 50 ஷேட்ஸ் ஆப் கிரே முறியடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ரோலிங்கும் அதே பாணியில் புகுந்துள்ளார். The Casual Vacancy என்ற பெயரில் ஒரு போர்ன் நூலை எழுதியுள்ளார் ரோலிங். இந்த நூலை அமெரிக்காவில் அவரே நேரடியாக வெளியிடுகிறார்.

நியூயார்க் லிங்கன் மையத்தில் உள்ள ஜாஸ் ஹாலில், அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தனது புத்தகத்தை விளக்கி அதை வெளியிட்டு புரமோட் செய்யவுள்ளார் ரோலிங். இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

'காமசூத்ரா' பிறந்த நம்மூரிலிருந்தும் யாராவது ஒருவர் இப்படிக் கிளம்பி வந்தால் நல்லாருக்குமே...!

English summary
This fall, British writer J.K. Rowling plans to make her one and only in-person appearance in the U.S. to promote her first novel for adults. The “Harry Potter” author will discuss “The Casual Vacancy” at New York’s Jazz at Lincoln Center on Oct. 16. The venue can seat about 1,100 people. Little, Brown and Company announced Wednesday that Rowling will be interviewed on stage by fellow author Ann Patchett and will take “select” audience questions. Rowling also will sign copies of her new book for each audience member. Booksellers will have access to a live web cast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X