ஓடும் ரயிலில் வாலிபர் தலையை வெட்டிக் கொலை: பயணிகள் முன்னிலையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

Train
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

கொல்கத்தா நோக்கி வந்த பயணிகள் ரயில் ஒன்று முர்ஷதாபாத் மாவட்டம் பஸார்செள ரயில் நிலையத்தில் நின்று கிளம்பியது. அப்போது அந்த ரயில் நிலையத்தில் கத்திகளுடன் ஒரு கும்பல் ஏறியது.

அவர்களைப் பார்த்ததும் அந்த பெட்டியில் பயணம் செய்த கோகோன் கோஷ் என்ற 37 வயது வாலிபர் பயந்து போய் இன்னொரு பெட்டிக்கு ஓடினார்.

ஆனால், அவரை அந்தக் கும்பல் விரட்டிச் சென்றது. இதையடுத்து கதவைத் திறந்து கொண்டு வெளியே பாய முயன்றார். ஆனால், ரயில் வேகம் எடுத்து விட்டதால் அந்த வாலிபரால் வெளியே குதிக்க முடியவில்லை.

அப்போது அந்த வாலிபரை கும்பல் சுற்றி வளைத்தது. பயணிகள் முன்னிலையில் அவரை அந்தக் கும்பல் பலமுறை கத்தியால் குத்திக் கொன்றது. பின்னர் கழுத்திலும் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை துண்டாகிவிட்டது.

பயணிகளில் யாவரும் அந்த வாலிபரை காப்பற்ற முன் வரவில்லை. பயத்தில் அப்படியே உறைந்து போய் நின்றனர்.

சிலர் செயினைப் பிடித்து இழுத்ததையடுத்து ரயில் நின்றது. இதையடுத்து அந்தக் கும்பல் எந்தவித பதட்டமும் இன்றி, இறங்கிச் சென்றுவிட்டது.

இனிப்பு விற்கும் வாலிபரான கோஷ் முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தது முதல் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு நாறிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. கடத்தல், கொலை, கற்பழிப்புகள் மிகச் சாதாரணமாக நடந்து வருகின்றன.

மம்தாவின் திரிணமூல் தொண்டர்கள் வெறியாட்டம்:

சில நாட்களுக்கு முன் கொல்கத்தா அருகே பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

காஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ரயிலில் பயணம் செய்வதற்காக உத்தர்தினாஜ்பூர் மாவட்டம் அலு பாரி பகுதியை சேர்ந்த சிலர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் முன்பதிவு பெட்டிகள் எல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவு பேரணியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் அந்த ரயிலில் வந்தனர்.

அலுபாரி ரோடு ரயில் நிலையத்தில் முன் பதிவு செய்திருந்த பயணிகள் தங்களுக்கான பெட்டியில் ஏறினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் எழுந்து இடம் விடுமாறு முன்பதிவு செய்த பயணிகள் கூறினர். அவர்கள் எழுந்திருக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.

மனைவியுடன் வந்திருந்த ஒருவர் தொண்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த தொண்டர்கள் அந்த பயணியை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டனர். ரயில் மெதுவாக சென்றதால் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக திரிணமூல் தொண்டர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். காரணம், ரயில்வே துறையின் அமைச்சராக மம்தா கட்சியின் அமைச்சர் தான் மத்தியில் உள்ளார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் தவறி விழுந்ததாக அந்த நபர் தவறி விழுந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+