பெரம்பலூர் அருகே சாலை விபத்து: கவுன்சிலர் உட்பட 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் பலியாகினர்.
பெரம்பலூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து மோதியதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் அமுதா, அவரது மகன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெரம்பலூர்- ஆலத்தூர் அருகே இச்சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications