திண்டுக்கல் அருகே 9ம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு சிறை!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாணவனை பிரம்பால் அடித்த பள்ளி ஆசிரியரை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பைனான்ஸ் தொழில் செய்து வருபவர். அவரது மகன் கார்த்திகேயன் (14). திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சிலரை கார்த்திகேயன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து விசாரித்த ஆசிரியர் பிரபு, கார்த்திகேயனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ராஜா பிரபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் பிரபுவை போலீசார் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் (பொறுப்பு) லதா வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications