விடுதலைப் புலிகள் மீதான தடை - தீர்ப்பாயத்தில் வாதிட வைகோவுக்கு அனுமதி
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த வாதங்களை முன்வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ர நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது பற்றிய தீர்ப்பாயத்தின் அறிவிப்பை கடந்த 18-ந் தேதி வெளியிட்டது. தீர்ப்பாயத்தின் விசாரணையில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தம்மையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கக் கோரினார்.
இது தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் சாண்டியோக் தமது வாதத்தை எடுத்துவைத்தார். வைகோ, தனது தரப்பு வாதத்தை கூறுகையில், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகளைச் சுட்டிக் காட்டித்தான் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நான், விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், அனுதாபி ஆவேன். கடந்த தீர்ப்பாயத்திலேயே, எங்கள் இயக்கமான ம.தி.மு.க.வை, மத்திய அரசு, தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது. புலிகளை ஆதரித்தேன் என்பதற்காக என் மீது வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும், இந்த விசாரணையில் நான் பங்கேற்கவும் அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது; அதே நேரத்தில் தீர்ப்பாய விசாரணையிலும், புலிகள் மீதான தடை குறித்து, வைகோ தன் வாதங்களை முன்வைக்கலாம் என்று நீதிபதி வி.கே.ஜெயின் ஆணை பிறப்பித்தார்.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு, சென்னையில் அடுத்த மாதம் 28, 29-ந் தேதி ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications