கீத்திகாவை தாறுமாறாக உறவுக்குப் பயன்படுத்தியதால் தற்கொலை செய்தாரா?

இயற்கைக்குப் புறம்பான வழிகளில் கீத்திகாவை உறவில் ஈடுபடுத்தியுள்ளதாக ஏற்கனவே தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. பிரேதப் பரிசோதனையிலும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முன்னாள் அமைச்சர் கண்டாவுடன் நெருக்கமாக இருந்தவர் கீத்திகா. எனவே கண்டா, கீத்திகாவை மிருகத்தனமான முறையில் உறவில் ஈடுபடுத்தியிருக்கலாம், அதைத் தாங்க முடியாமல், விரக்தி அடைந்தே தற்கொலை முடிவை கீத்திகா எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு கீத்திகா எழுதி வைத்திருந்த கடிதத்தில், கண்டாவும், அவரது உதவியாளர் அருணா சத்தாவும் தனது வாழ்க்கையை சீர்குலைத்து விட்டதாக கூறியிருந்தார் கீத்திகா. இது குறித்து கண்டாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் உரிய பதிலைத் தரவில்லை.
ஆனால் இயற்கைக்குப் புறம்பான உறவில் கீத்திகாவை, கண்டா ஈடுபடுத்தியதால்தான் கீத்திகா தனது முடிவைத் தேடிக் கொண்டதாக தற்போது போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொடுமை தாங்க முடியாமல்தான் கீத்திகா தற்கொலைக்குப் போய் விட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது கண்டா போலீஸ் காவலில்தான் உள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி கீத்திகா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications