பள்ளியில் 'புட்பால்' விளையாடிய மாணவன் திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில் உள்ள பள்ளியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மரணமடைந்து விழுந்தான். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடலூரில் செயின்ட் ஜோசப் பள்ளி உள்ளது. அதே வளாகத்திலேயே அதன் கல்லூரியும் உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் பரதன்.
இன்று காலை மாணவர்களுக்கிடையே கால்பந்துப் போட்டி நடந்தது. அப்போது பரதன் மீது பந்து வேகமாக வந்து தாக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பரதன் சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தான். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக மாணவின் உடலை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானவர்கள் திரண்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications