ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு பெண்களைக் குற்றம் சாட்டுவதா?... மோடிக்குக் குவியும் கண்டனங்கள்
டெல்லி: பெண்கள் அழகுக்காக உடலை வருத்திக் கொள்கின்றனர். பால் கூட குடிக்க மறுக்கிறார்கள். இப்படி உடலை வருத்தி அழகைப் பெற வேண்டும் என்ற நினைப்பதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்று கூறியுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடி அளித்த ஒரு பேட்டியில், ஒரு தாய், தனது மகளிடம் பால் சாப்பிடு என்றால் அங்கே பெரிய சண்டையே வெடிக்கிறது. பால் சாப்பிட்டால் எனது உடல் பெருத்து விடும், கொழுப்பு கூடி விடும், குண்டாகி விடுவேன் என்று பெரும்பாலான டீன் ஏஜ், இளம் பெண்கள் கூறுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
மோடி பேச்சு வருத்தத்திற்குரியது - சல்மான் குர்ஷித்
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு் தெரியாமல் போனது வருத்தமானது என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், ஜிடிபி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றார்.
தேவையில்லாதது - கிரிஜா வியாஸ்
மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் கூறுகையில், மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது என்றார்.
டிவிட்டரிலும் குவியும் கண்டனங்கள்
இதேபோல டிவிட்டரிலும் பலர் மோடியைக் கண்டித்து பேசி வருகின்றனர். பர்ஸானா வெர்சி என்பவர் கூறுகையில், மோடியின் இந்தப் பேச்சு வெனிசூலா நாட்டுப் பெண்களின் அழகு ஆர்வத்தை அடிப்படையாக கொண்டு வந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
கஷ்யப் ஷா என்பவர் கூறுகையில், நமோ (நரேந்திர மோடி என்பதன் சுருக்கம்)கூறியுள்ள கருத்து அதிர்ச்சி தருகிறது. அனைத்தையும் நன்கு அறிந்த அவரே இப்படிக் கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ரொம்ப சோகமான கருத்து என்று கூறியுள்ளார்.
சாந்தனு என்பவர் கூறுகையில், ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டும் என்றே வரவேற்க மாட்டார்கள் என்பதை சாதாரணர்கள் கூட புரிந்து கொள்ள முடியும். மோடிக்குப் புரியாமல் போனது ஆச்சரியம்தான் என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications