இந்தியன் முஜாஹிதீனுடன் தொடர்பு: பெங்களூர் பத்திரிக்கையாளர் உள்பட 5 பேர் கைது
பெங்களூர்: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிரபல ஆங்கில நாளிதழின் செய்தியாளர் உள்பட 5 பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கைது செய்யப்பட்டனர். மேலும் பெங்களூரில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழின் செய்தியாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திகியை உத்தர பிரதேச போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் சி்த்திகியை பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த 5 பேரும் புனிதப்போர் எனப்படும் ஜிஹாத் இலக்கியம் சம்பந்தப்பட்டவைகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் அவ்வப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசி வந்துள்ளனர். தற்போது அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் முக்கிய தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications