முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் பயணம் திடீர் ஒத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் செல்லும் திட்டம் திடீர் என்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி தனது தொகுதியான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் செல்வதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அவர் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நித்திய அன்னதான திட்டம் துவக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. முதல்வரின் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் சாலை அமைத்தல், சாலை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் முதல்வரின் திருச்சி பயணம் திடீர் என்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications