மதுரையிலிருந்து முதல்முறையாக வெளிநாட்டுக்கு விமானம்- ஸ்பைஸ்ஜெட்டின் கொழும்பு சேவை
Subscribe to Oneindia Tamil

கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் விமானத்தை இயக்கவுள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக பம்பார்டியர் Q400 ரக விமானத்தை ஸ்பைஸ்ஜெட் பயன்படுத்தவுள்ளது. இதில் 78 பேர் பயணம் செய்யலாம்.
சென்னையிலிருந்து கொழும்புவுக்கு ஏற்கனவே விமான சேவையை நடத்தி வரும் ஸ்பைஸ்ஜெட் முதல்முறையாக மதுரையிலிருந்தும் தினந்தோறும் கொழும்புவுக்கு விமானத்தை இயக்கவுள்ளது.
டெல்லி- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இடையே விமான சேவையைத் துவக்கவும் ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications