For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஷல் ஒபாமாவை அடிமை போல சித்தரித்துப் படம்- சர்ச்சையில் ஸ்பெயின் பத்திரிக்கை!

Google Oneindia Tamil News

Michelle Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷலை கருப்பர் இன அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண கோலத்தில் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கை ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒரு கருப்பர் இனத்துப் பெண் மேலாடை இல்லாமல், வெற்று மார்புகளுடன் இருப்பது போல அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற பத்திரிக்கை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இனவாத, செக்ஸ் வக்கிரம் பிடித்த செயல் என்று கண்டனங்கள் வெடித்துள்ளன.

ஏற்கனவே பாடகி ரிஹானாவை இப்படித்தான் ஒரு டச்சு நாட்டு பத்திரிக்கை மோசமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் மிஷல் ஒபாமாவை அசிங்கமாக சித்தரித்துப் படம் போட்டிருப்பது புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.

கரின் பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூப்பர் இம்போஸ் மூலம் பொருத்தி வெளியிட்டுள்ளனர்.

English summary
Images of black women in the media have long since been deemed controversial, often times crossing the volatile lines of racism and sexism. As seen on this month's cover of Spain's Fuera de Serie, even the First Lady Michelle Obama is fair game. The Spanish Magazine either decided to go provocative or political when featuring a manipulated image of the first lady pictured as a topless, enslaved woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X