உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கிய தமிழக அரசு உத்தரவை ரத்து செய்த ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக உதயகுமார் தலைமையிலான மக்கள் மாதக் கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கி அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உதயகுமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாலேயேஅவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு உதயகுமாரின் வழக்கறிஞர் வாதாடுகையில், அவர் மீதான வழக்குகள் காவல் நிலையத்தில் தான் உள்ளன. எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உதயகுமாரின் பாஸ்போர்ட்டை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+