எல்.கே.ஜி. படிக்க வைக்க ரூ31,875- தமிழக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு கமிட்டி நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி எல்.கே.ஜிக்கு அதிகபட்சமாக ரூ31, 875ம் பிளஸ் டூ படிக்க கட்டணமாக ரூ36 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவானது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயித்து நேற்று வெளியிட்டது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளிக்கான கல்விக்கட்டண விவரங்களை (வகுப்பு வாரியாக) தமிழக அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி, அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.31,875-ம், பிளஸ்-2-வுக்கு ரூ.36 ஆயிரமும் நிர்ணயித்துள்ளார்கள். அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பள்ளிகள் இரண்டும் சென்னையில் உள்ளன. மிகக் குறைந்தபட்ச கட்டணமாக எல்.கே.ஜி.க்கு ரூ.6 ஆயிரமும், பிளஸ்-2-வுக்கு ரூ.7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications