தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடு கட்ட ரூ. 1,000 கோடி: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2011ம் ஆண்டு இறுதியில், ‘தானே புயல்' தமிழகத்தை தாக்கியதன் விளைவாக, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கட்டமைப்புகளையும், பயிர்களையும், வீடுகளையும், படகுகளையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கி, அப்பகுதி மக்களின் உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் சூறையாடிவிட்டுச் சென்ற நிலையில், போர்க்கால அடிப்படையில், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது மட்டுமல்லாமல், தானே புயலால் வீடு இழந்த மக்களின் துயர் துடைக்கும் வண்ணம், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ரூ.1,000 கோடி மதிப்பில் 1,00,000 கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில், தானே புயலால் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் 90,000 கான்க்ரீட் வீடுகளையும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 கான்கீரீட் வீடுகளையும் கட்டித்தரும் வகையில் ரூ.1,000 கோடி நிதியினை ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்காணும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 200 சதுர அடி அளவில் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீடும், குடியிருக்கும் அறை, சமையலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக இருக்கும். அரசின் இந்த நடவடிக்கை தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினை துடைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications