முடங்கியிருக்கும் நாடாளுமன்றம்... மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு அமெர்க்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை காங்கிரஸ் ரகசியமாகவே வைத்துள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவப் பரிசோதனைக்ககாக நேற்று வெளிநாடு கிளம்பினார். நாடாளுமன்ற முடக்கத்தைப் போக்க முயற்சி மேற்கொண்டு வந்த சோனியா வெளிநாடு சென்றுள்ளதால் காங்கிரஸ் பாடு சற்றே கஷ்டம் தான்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி கூறுகையில்,
சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் ஒரு வாரத்தில் நாடு திரும்பிவிடுவார் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதமும் சோனியா மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்று வந்தார். அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வெளிநாடு சென்றருந்தபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் மற்றும் திவேதி ஆகியோர் அடங்கிய குழு கட்சி பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications