நாடாளுமன்றம் முடக்கம் சுஷ்மாவுடன் சோனியா திடீர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Sushma Swaraj and Sonia Gandhi
டெல்லி: நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று திடீரென சந்த்த்துப் பேசினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது தேர்தலை சந்தித்தாக வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இரண்டில் ஒன்று நிறைவேறும்வரை நாடாளுமன்றத்தை செயல்படவிட மாட்டோம் என்பதும் அக்கட்சியின் கருத்து.

ஆனால் ஒருபோதும் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகப் போவதில்லை என்பது காங்கிரசின் பிடிவாதம்.

இந்நிலையில் நாடாளுமன்றம் முடங்கியிருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. காங்கிரஸ் கட்சியின் மையகக் குழு கூட்டத்தையும் கூட்டி சோனியா ஆலொசனை நடத்தியிருக்கிறார்

இதனிடையே திடீரென பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் சோனியா திடீரென சந்த்த்துப் பேசினார். ஆனாலும் இந்த சந்திப்பினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தை முடக்கித்தான் வைப்போம் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்பதால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற பரபரப்பு நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+