இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரி விலகல்-விப்ரோவில் சேருகிறார்

இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் அமெரிக்க நிதிச் சேவைகள் பிரிவின் தலைவருமான ஷாஜி பரூக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விப்ரோ நிறுவனத்தில் இணையப் போவதாகத் தெரிகிறது.
20 வருட சாப்ட்வேர் துறை அனுபவம் கொண்ட பரூக், இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் தலைமை வகித்து வந்த அமெரிக்க நிதிச் சேவைகள் பிரிவு தான் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாயில் அதிக பங்கு வகித்து வருகிறது.
இந் நிலையில் இவரது விலகல் குறித்து இன்போசிஸ் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்து பின்னர் கருத்து சொல்வதாக விப்ரோ கூறியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த ஓராண்டில் 3 டாப் அதிகாரிகள் விலகியுள்ளனர். அதன் இயக்குனர் குழுவில் இருந்த மோகன்தாஸ் பய், விற்பனைப் பிரிவு அதிகாரி சுபாஷ் தர், இன்போசிஸ் பிபிஓ பிரிவின் தலைமை செயல் அதிகாரி ரிதேஷ் இதானி ஆகியோர் கடந்த ஓராண்டில் ராஜினாமா செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications