8 பேரிடம் பழகி 4 பேரை மணந்த ஷானாஸ் மீது மேலும் 4 வழக்குகள்

பெங்களூரில் வைத்து சிக்கிய ஷானாஸ் தற்போது புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிக்கி அடையாறு சரவணன், வேப்பேரி சம்சுதீன், திருவொற்றியூர் சரவணன், புளியந்தோப்பு பிரசன்னா, போரூர் முகலிவாக்கம் மணிகண்டன், பேசின்பிரிஜ் பகுதியை சேர்ந்த சுரேஷ், தி.நகர் ராஜா, திருச்சியை சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுல் ஆகியோர் பணம், பொருள், இன்ன பிறவற்றை இழந்துள்ளனர்.
இவர்களில் அடையாறை சேர்ந்த சரவணனிடம் நோட்டரி பப்ளிக் தேர்வு எழுதுவதற்காக ரூ.25 ஆயிரம் பணம் தேவைப்படுவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் சரவணனும், ஷானாஸிடம் மயங்கி 2 பவுன் தங்கச்செயினை பரிசாக வழங்கியுள்ளார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஷானாஸை அடுத்தடுத்து 4 வழக்குகளில் போலீஸார் புக் செய்துள்ளனர். இதிலும் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முகலிவாக்கம் மணிகண்டன் கொடுத்த புகார் தொடர்பாக நேற்று மாலை மாங்காடு போலீசார், ஷானாஸ் மீது மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல புரசைவாக்கம் சம்சுதீன், திருவொற்றியூர் சரவணன், புளியந்தோப்பு பிரசன்னா ஆகியோரின் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மருத்துவப் பரிசோதனை
முன்னதாக சிறையில் அடைப்பதற்கு முன்பு ஷானாஸை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போலீஸார் அங்கு ஷானாஸுக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்தினர்.
அப்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக் குழந்தைக்குத் தந்தை யார் என்பது குறித்து அடுத்து பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது.
புளியந்தோப்பு பிரசன்னாதான் தனது கர்ப்பத்துக்குக் காரணம் என்று ஷானாஸ் கூறுகிறார். அதற்கு பிரசன்னா போலீஸாரிடம் கூறுகையில், தந்தை நானாக இருந்தாலும், எப்படி இந்தப் பெண்ணுடன் இனி வாழ முடியும் என்று கேட்டாராம்.
ஏற்கனவே போலீஸ் விசாரணையில், தான் 8 பேருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அதில் 4 பேரை மட்டுமே மணந்து கொண்டதாகவும் ஷானாஸ் கூறியது நினைவிருக்கலாம். ஷானாஸின் கணவர்மார்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதாவது சென்னைக்காரர்கள். சித்திக் மட்டுமே மலையாளி ஆவார்.












Click it and Unblock the Notifications