நானும், ஹாரியும் மாறி மாறி 20 நிமிடம் முத்தமிட்டுக் கொண்டோம்-இளம் பெண் பேட்டி

Subscribe to Oneindia Tamil

Carrie Reichert
லண்டன்: இளவரசர் ஹாரியும் நானும் 20 நிமிடங்கள் வரை மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டோம். அது சும்மா விளையாட்டுக்காகத்தானே தவிர காதல் இல்லை என்று ஹாரியுடன் நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண் கூறியுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற அவர்கள் நிர்வாணநிலையில் இருந்தனர். இளவரசர் ஹாரியும் நிர்வாணமாக இருந்தார். அப்போது இளம் பெண்கள் சிலர் அவருக்கு முத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது.

அவருக்கு முத்தம் கொடுத்த ஹெரி ரிச்சட் என்ற 32 வயது இளம்பெண் இங்கிலாந்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், ஓட்டல் நடன விருந்து நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். விருந்தில் கலந்து கொண்ட பலரும் ஆடையில்லாமல் இருந்தனர். நான் நீச்சல் உடை அணிந்திருந்தேன். இளவரசர் ஹாரி அங்குள்ள நீச்சல் குளம் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் அவருடன் கைகோர்த்து ஆடினேன். பின்னர் அவர் கையை பிடித்து இழுத்தபடி அவரது படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அப்போது அவருக்கு முத்தம் கொடுத்தேன். நானும் எனது ஆடையை அவிழ்த்தேன்.

இளவரசர் என்னோடு 20 நிமிடம் தொடர்ந்து முத்தம் கொடுத்தார். மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டோம். நாங்கள் காதல் உணர்ச்சியுடன் முத்தம் கொடுக்க வில்லை. விளையாட்டாகதான் முத்தம் கொடுத்து கொண்டோம். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. இது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

விளையாட்டாக கொடுத்த முத்தம் என்று அந்த பெண் கூறினாலும் இப்போது ஹாரி விசயத்தில் அதுவே வினையாகி இங்கிலாந்து முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+