நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக 5 நிறுவனங்கள் மீது சிபிஐவழக்கு- 30 இடங்களில் அதிரடி சோதனை

நாட்டை உலுக்கியிருக்கும் நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிபிஐயும் தனது பங்குக்கு சாட்டையை சுழற்றத் தொடங்கியிருக்கிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக 5 நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சுரங்க முறைகேடு தொடர்பாக 10 நகரங்களில் மொத்தம் 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, ஹைதராபாத், தன்பாத், நாக்பூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
மேலும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடக மாநிலங்களில் நிலக்கரி சுரங்கத்தைப் பெற்றுக் கொண்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்கள் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த 3 மாதங்களுக்கு முன்பே ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த காலக்கெடு கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதனால் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்த சிபிஐ இப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இனி எத்தனை தலைகள் உருளுமோ?
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications