காதலி, கணவர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டு இறந்த வாலிபர்
டெல்லி: டெல்லியில் காதலி வேறு ஒருவரை மணந்ததால் கடுப்பான காதலன் காதலி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள விஸ்வாஷ் நகரைச் சேர்நதவர் ரவி(25). அவர் ரேணு என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் ரேணுவை நவீன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ரேணு தனது கணவருடன் தென்கிழக்கு டெல்லியில் உள்ள பிந்தாபூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் ரவி ரேணுவுடன் தொடர்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு ஒருவருக்கு ரேணுவை மணம்முடித்து வைத்துவிட்டார்களே என்று ரவிக்கு திடீர் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பிந்தாபூருக்கு சென்று தனது காதலி, அவரது கணவர் நவின் ஆகியோரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டு உரிமையாளர் ஷீலாவையும் அவர் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவர் வெளியே சென்றபோது அவரது கைகளில் 2 துப்பாக்கிள் இருந்ததாக ஷீலாவின் மகன் தினேஷ் தெரிவித்தார். அருகில் வந்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று தினேஷை மிரட்டிவிட்டு ரவி காரில் தப்பிச் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் சென்ற ரவி அங்கு ரேணுவின் தந்தை ஹரேந்தர் மற்றும் சகோதரி பேபி ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications