மும்பையை முடக்கிப் போட்ட கனமழை: அமராவதியில் கோவில் சுவர் இடிந்து 5 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் மும்பையின் தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் மும்பையில் ரயில்கள் தாமதமாக வருகின்றன. இதனால் பயணிகள் மணிக்கணக்கில் ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கனவே தண்ணீரில் தத்தளிக்கும் மும்பையில் நேற்று இரவு கன மழை பெய்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கொலாபாவில் 79.2 மிமீ மழையும், சான்டா க்ரூஸில் 148.9 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாரத்வாடா பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தண்ணீரில் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள கவுன்டின்யாபூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் சுவர் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்கள் நேற்று தான் மீட்கப்பட்டன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications