எதிர்ப்புகள் இருந்தாலும் மகிந்த ராஜபக்சே இந்தியா செல்வார்: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி அருகே பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சாஞ்சியிலேயே கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ல ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல குணசேகர, ராஜபக்சே இந்தியா செல்வது உறுதியானது. அவரது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications