சி.பி.எம். எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் மோதிய கரூர் கலெக்டர் ஷோபனா

கரூர் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த ஏழு மணல் குவாரிகள், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி கடந்த 31ம் தேதி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி கலெக்டரை சந்திக்க அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ.வை சந்திக்காமலும், எந்த தகவலும் கூறாமலும் கலெக்டர் தனது அலுவலகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டாராம். மேலும் எம்.எல்.ஏ. கலெக்டர் ஷோபனாவை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அவர் போனையும் எடுக்கவில்லையாம்.
கலெக்டரின் இந்த செயலுக்கு கரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது.
இதற்கிடையே கடந்த 31ம் தேதி நடந்த சம்பவங்களை அப்படியே தொகுத்து தனது கட்சி அலுவலகத்திற்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் பாலபாரதி புகார் கடிதம் எழுத உள்ளாராம். ஷோபனா கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றது முதல் பத்திரிக்கையாளர்களைக் கூட சந்திக்க மறுத்து வருகின்றாராம்.
ஷோபனாவுக்கு முதல்வர் அலுவலகத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதால் தான் அவர் இப்படி தைரியமாக நடந்து கொள்கின்றார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications