செங்கல்பட்டு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
செங்கல்பட்டு: ஒரு மாதத்திற்கு முன்பு திருமணமான அதிமுக கவுன்சிலர் செங்கல்பட்டு அருகே இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள பாரேரி கிராமம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வேலு என்ற குமாரவேல் (38). காட்டாங்குளத்தூர் ஒன்றிய 16வது வார்டு அதிமுக கவுன்சிலர். இன்று காலை அவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.
அதன் பிறகு அவர் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினார். அனுமந்தபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு கார் வந்து அவரது பைக்கை இடித்தது. இதில் நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதில் குமாரவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இந்த தகவல் பரவியதும் சிங்கப்பெருமாள் கோவிலில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராமு சிங்கப்பெருமாள் கோவிலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு அவரது அண்ணனும், காட்டாங்குளத்தூர் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான முனிராஜ் வாக்கிங் சென்றுவிட்டு வந்தபோது அவரது வீட்டுக்கு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி குமாரவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது மறைமலைநகர், செங்கல்பட்டு காவல் நிலையங்களிலும் பல வழக்குககள் உள்ளன. அதனால் முன்விரோதம் காரணமாக குமாரவேல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
குமாரவேலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications