குமரியில் கடல் சீற்றம்: 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு- படகுகள், வீடுகள் சேதம்
குமரி: குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் ராட்சத அலைகள் எழும்பின. குளச்சல் துறைமுக பாலத்தில் சுனாமி அலைகள் போல் எழுந்த அலைகள் மீனவர்களையே மிரட்டின. இந்த அலைகள் துறைமுக திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கடல் அலை தடுப்பு சுவரையும் தாண்டி மணல் பரப்பில் வந்து விழுந்தன. இதனால் மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் பயங்கர சத்தத்துடன் ஒன்றொடு ஒன்று மோதி உடைந்தன. படகுகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்கள் மண்ணில் புதைந்தன.
நித்திரவிளை அருகே உள்ள 8க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கடலில் ஆக்ரோஷமான அலைகள் எழும்பின. கடலரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி மக்கள் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தூத்துர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் பைபர் படகுகளை கடல் அலை இழுத்துச் சென்றது. முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு தடுப்புசுவர் சேதம் அடைந்தது. இது தவிர 30 கிமீ தூரத்திற்கு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications