ப.சிதம்பரத்துக்கு சென்னையில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குடலிறக்கத்திற்கான சிறுதுளை அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபிக்) நடைபெற்றுள்ளது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடலிறக்கத்திற்கான லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications