தூத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
தூத்துக்குடி: அதிக எரிசக்தி திறன் கொண்ட இந்தோனேசிய நிலக்கரியை கன்வேயர் பெல்டில் கொண்டு சென்றதே தூத்துக்குடி அனல் மின் நிலைய தீ விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெட்டில் கடந்த ஜூலை மாதம் 2, 16 ஆகிய தேதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.15 கோடியே 25 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் நியமித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் 3வது யூனிட்டுககு இடையேயான கன்வேயர் பெல்டில் தீப்பிடித்தது. இதில் மின் வயர்கள், கன்வேயர் பெல்ட், இரும்பு கோபுரங்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 3வது யூனிட்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆவதால் அந்த யூனிட்களின் கன்வேயர் பெல்ட்கள் தரம் குன்றிவிட்டன. ஆனால் இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், அதுவே தீ விபத்துக்கு காரணம் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனல் மின் நிலையம் துவங்கி 33 ஆண்டு்கள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அது பல விருதுகள் வாங்கிக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications