அதி வேக காரில் 'செக்ஸ்'.. சீன அதிபரின் உதவியாளர் மகன் விபத்தில் பலியான பின்னணி!

கடந்த மார்ச் மாதம் பெய்ஜிங் நகரில் ஒரு பெராரி கார் விபத்துக்குள்ளானது. படு வேகமாக வந்த அந்த கார் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த லிங் கு என்பவர் பலியானார். மேலும் காரில் இருந்த இரண்டு இளம் பெண்கள் படுகாயமடைந்தனர். லிங் குவின் தந்தை வேறு யாருமல்ல, அதிபர் ஹூ ஜிண்டாவோவின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.
இந்த விபத்து குறித்து சீன மீடியாக்களில் பெரிதாக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. மிகச் சிறிய அளவிலேயே செய்தி போட்டிருந்தனர். இந்த நிலையில் அதி வேகமாக பெராரி கார் சென்று கொண்டிருந்தபோது காருக்குள்ளேயே இரண்டு பெண்களுடன் லிங் கு செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால்தான் விபத்து நேரிட்டதாக ஹாங்காங் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின்போது லிங் அரைகுறை உடையுடன்தான் இருந்தார். அதேபோல அவருடன் பயணித்த இரண்டு பெண்களும் கூட அரை நிர்வாணத்திலேயே மீட்கப்பட்டனர். எனவே இவர்கள் மூவரும் அதி வேகமாக சென்று கொண்டிருந்த காரில் அதி தீவிர செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா ஒரு இரும்புத் திரை நாடாகும். அந்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஊழல், செக்ஸ் ஊழல்கள் என சரமாரியாக சர்ச்சைகளில் மாட்டி வருகின்றனர். இதனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதிபரின் நெருங்கிய உதவியாளர் மகன் ஓடும் காரில் செக்ஸ் வைத்து செத்தான் என்று செய்தி வெளிவந்தால் அது அதிபருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால்தான் அந்த செய்தியை அப்படியே மறைத்து விட்டதாம் சீன கம்யூனிஸ்ட் அரசு.












Click it and Unblock the Notifications