உயர.. உயர போகும் தங்கத்தின் விலை: ஒரு சவரன் ரூ.26,206

தங்கத்தின் விலை ஏற்கனவே விண்ணைத் தொட்டுவிட்டது. தற்போது விண்ணையும் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் ஏழை, எளிய மக்கள் எல்லாம் இனி தங்கத்தை நகைக்கடை ஷோகேசில் தான் பார்க்கலாம். வாங்கி அணியும் ஆசையை விட்டுவிட வேண்டியது தான். இந்நிலையில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,275க அதிகரித்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலைரூ.26,206 ஆகும்.
திருமண சீசன் ஆரம்பித்துள்ளதால் தங்கத்திற்கு கிராக்கி அதிகரித்து கூடவே விலையும் அதிகரித்துள்ளது. திருமண சீசனை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திருமண சீசன் தவிர பண்டிகை காலமும் வருவதால் தங்கத்தின் விலை நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உயரும் என்று கூறப்படுகிறது.
தங்கத்தின் விலையை கேட்டு மக்கள் ஏற்கனவே ஆச்சரியத்தில் தான் உள்ளனர். இந்நிலையில் மேலும் விலை உயர்ந்தால் அது மக்களை ஆச்சரியப்பட வைக்காது மாறாக மயங்கி விழச் செய்யும்.












Click it and Unblock the Notifications