Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீன-இந்திய ராணுவ கூட்டுப் பயிற்சியை கைவிட வேண்டும்: ராம.கோபாலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியா-சீனா ராணுவ கூட்டுப் பயிற்சியை இந்தியா கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சீனா நமது அண்டை நாடு என்பது உண்மை தான். ஆனால் அது என்றுமே நமக்குத் தொல்லை தரும் நாடுகளின் பட்டியலில் இருந்து வருகிறது. சீனாவால் நமது நாடு இழந்தது ஏராளம். இன்றும் இழந்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே சீன-இந்திய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைத் தன்னுடைய பிரதேசமாக சீனா அறிவித்தது. அருணாசலப் பிரதேசத்திற்குப் இந்திய பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்கள் செல்லும் போது அதற்கு சீனா கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசும் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்கதையாகி வருகிறது. மேலும் அருணாசலப் பிரதேசத்தை எல்லைப் பிரச்னையாக்கி வருகிறது சீனா.

மேற்கு வங்கம் காடுகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதங்களை வீசியது சீனா என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது பயங்கரவாதத்தை இந்தியாவில் கட்டவிழ்த்துவிட மேற்கொண்ட நடவடிக்கை ஆகும். இன்றும் இந்தியாவில் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வரும் மாவோயிஸ்ட்களுக்கு சீனா ஆயுத உதவி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா-இந்தியா போர் முடிந்த பிறகு இந்தியாவின் பல லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து கொண்டது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் அது அந்த இடங்களை விட்டு கொடுக்கவில்லை. இது சீனா நமக்கு செய்த துரோகம்.

சீனாவின் குள்ளநரித் தந்திரத்தால் நமது நட்பு நாடாக இருந்த நேபாளம், மியான்மர் (பர்மா), இலங்கை போன்ற நாடுகளின் பார்வை மாறியுள்ளது. உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தை மாவோயிஸ்டுகள் அடாவடியால் மாற்றி கைப்பற்ற வைத்தது சீனாவின் கை. அதன்பிறகு நேபாளம் இந்து நாடு என்ற நிலையை மாற்றியது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் சீன ராணுவத்தின் உதவியால் விடுதலைப்புலிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு நடந்த அத்துமீறலிலும் சீனாவின் பங்கு உள்ளது.

இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இடத்தை தனதாக்கிய சீனா அங்கு ராணுவ நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காஷ்மீர் பகுதியிலிருந்து சீனா வர விரும்புகிறவர்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவையில்லை, எல்லையில் ஒரு சீட்டு கொடுக்கப்படும், அதுபோதும் என்று அறிவித்தது. அதனை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது.

இந்திய கடல் எல்லைகளில் சீனா ராணுவ நிலைகளை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை திரிகோணமலையிலும் ராணுவ மையம் அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

இப்படி இந்தியாவை சுற்றிலும் ராணுவ நிலைகளை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பிற்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரம் என்ற பெயரில் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட மருந்துகள், ரசாயனப் பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க மட்டமான பொருள்களை குறைந்த விலை என்ற மாய வலையில் இங்கு விற்பனை செய்து நமது மக்களை சுரண்டுகிறது. இதனால் நமது பொருளாதாரம் வீணடிக்கப்படுவதுடன், நமது தொழிற்துறை முன்னேற்றமும் படுபாதாளத்திற்கு தள்ளப்படுகிறது.

வெளிநாட்டு ராணுவ அமைச்சர், இந்திய சுற்றுப்பயணத்தின் போது நமது நாட்டு ராணுவ வீரர்களின் பலி தானத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெய் ஜவான் ஜோதிக்குச் சென்று மரியாதை செலுத்துவது மரபு. இந்த மரபையும் சீன ராணுவ அமைச்சர் கடைப்பிடிக்க மறுத்துள்ளார்.

எனவே சீனா நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நாடு, அந்த நாட்டு ராணுவத்தினர் நமது நாட்டு ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெறுவதால் நாட்டின் பாதுகாப்பிற்குப் பாதிப்பையும், ராணுவ ரகசியங்கள் கசிவதற்கும் வாய்ப்பாகவும் அமையும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சீன ராணுவ கூட்டு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+