ஷானாஸுக்கு ஜாமீன் கிடைக்குமா... திங்கள்கிழமைதான் தெரியும்

இன்று நீதிபதி பொன். கலையரசன் முன்பு ஷானாஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஜெகன் கூறுகையில்,
ஷானாஸுக்கு எதிராக 9 புகார்கள் கூறப்பட்டுள்ளன. சரவணன் என்பவர் மட்டும் 4 புகார்கள் கொடுத்திருக்கிறார். அவரது புகாரின் மீது சாஸ்திரி நகர் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து ஷானாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாம்பலம் போலீசில் ராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் ஷானாஸைக் கைது செய்ததாக காட்டியுள்ளனர். ஷானாஸுக்கு எதிராக புளியந்தோப்பு, திருவொற்றியூர், வேப்பேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் புகார் தந்தவர்கள் அதன் பிறகு போலீஸ் விசாரணைக்கு வரவில்லை என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஷானாஸின் வக்கீல் சிவா, ஷானாஸ் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரது நிலைமையை கருத்தில் கொண்டு இந்த கோர்ட்டு அவருக்கு ஜாமீன் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து திங்கள்கிழமை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் கலையரசன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications