டெல்லியில் அக்கிரமம்...ரயில் நிலையத்தில் பெண்ணை சீரழித்த போலீஸ்காரர்
டெல்லி: தலைநகர் டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத நகரம் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறது. அங்கு பெண்கள் மீதான பாலியல் அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதான இளம் பெண் ஒருவர் தனது சகோதரியுடன் விஷ்ணுகார்டன் என்ற இடத்தில் ரயில் ஏறுவதற்காக ரயில் நிலையம் வந்தார். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் வந்துள்ளனர். அப்போது ரயில் நிலையமே வெறிச்சோடிக் கிடந்தது.
இதனால் அங்குள்ள பயணிகளுக்கான வெயிட்டிங் ரூமில் இருவரும் தங்கினர். அப்போது குளியல் அறைக்கு இளம் பெண்ணின் சகோதரி சென்றுள்ளார். 20 வயதுப் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு ரயில்வே சிறப்பு்ப போலீஸ்காரர் பிந்துசிங் என்பவர் அங்கு வந்துள்ளார். தனியாக இளம் பெண் இருப்பதைப் பார்த்த அவர், நைச்சியமாக பேசி 2வது மாடிக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு விஐபிக்கள் தங்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார்.அங்கு அவரது நண்பரான பிரதாப் சிங் என்பவரும் இருந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைப் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்தப் பெண் இருவரிடமும் சிக்கி பெரும் துயரத்துக்குள்ளானார். மறு நாள் காலையில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். சம்பவத்தன்று போலீஸ்காரர் பிந்து சிங் ரயில் நிலையத்தில் அப்பெண்ணிடம் பேசி அழைத்துச் சென்றது ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகியுள்ளதால் பிந்துசிங் கைது செய்யப்பட்டார். அவரது நண்பரும் கைதானார்.












Click it and Unblock the Notifications