வானில் கொக்குகளுக்கு சமமாக பறந்த ரஷிய அதிபர் புதின்

ரசியாவின் வடகோடி பகுதிக்கு பயணம் மேற்கொண்ட புதின், கிளைடரில் வானில் பறக்க அப்போது சைபீரிய கொக்குகளும் அந்த கிளைடருக்கு சமமாக பறந்து கொண்டிருந்தன. பின்னர் ஹாயா கிளைடரில் உட்கார்ந்தபடியே சைபீரிய கொக்கு தமது வாகனத்தை விட்டு நகரும் வரை உற்றுப் பார்த்தபடியே காத்திருந்து பின்னர் காற்றில் பறந்திருக்கிறார்.
இப்படி புதின் வெள்ளை உடையில் வானில் பறப்பதற்கு முதல்நாள் ஒரு வேடிக்கையும் அரங்கேறியுள்ளது. ரசியாவின் "ஆல்பா- நாய்" என்று புதினை அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அம்பலமாகியிருந்தது. இதேபோல் புதின் ஒரு கறுப்பு உடையில் சாம்பல் நிற இறக்கைகளுடன் நிற்பதைப் போல கார்ட்டூனும் வரையப்பட்டிருந்தது. சைபீரிய கொக்குகளுடன் பறந்துவிட்டு தரையிறங்கி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த புதின், இப்ப நான் ஆல்பா- கொக்கு என்று சொல்லி சிரித்திருக்கிறார்.
புதின் இப்படித்தான் அவ்வப்பொழுது தமை இமேஜை பில்டப் செய்து கொள்கிறார்! மேற்சட்டை போடாமல் குதிரை சவாரி, வேட்டையாடுதல் போன்ற பல போஸ்களை கொடுத்து அசத்தும் புதினைப் பற்றிய இப்பொழுதைய பேச்சு "சைபீரிய கொக்குகளுடன்" வானில் பறந்த கதைதான்!












Click it and Unblock the Notifications