ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுங்க...: பில் கிளிண்டன் வேண்டுகோள்
சார்லொட்டி: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சார்லொட்டியில் நடைபெற்ற அதிபர் வேட்பாளரான பராக் ஒபாமாவை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட பில்கிளிண்டன், ஒபாமாவை கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார். ஒபாமாவை ஆதரித்து சுமார் 45 நிமிட நேரம் உரையாற்றினார் கிளிண்டன். ஒபாமாவை ஏன் வெற்றி பெற வைக்க வேண்டு என்பதற்கான காரணங்களை அவர் வரிசைப்படுத்தி பேசினார். ஒபாமா எப்போதும் அமெரிக்காவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர் என்றும் கிளிண்டன் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தபோது பதவியேற்ற ஒபாமா, 4 ஆண்டுகளிலேயே நாட்டில் இருந்த அனைத்து வித கோளாறுகளையும் சரிசெய்தவர் ஒபாமா என்றார்.
ஒபாமாவே பில் கிளிண்டனை அழைத்து தமது பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். இதே கிளிண்டன்தான் கடந்த 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை தெரிவித்திருந்தார் என்ற சர்ச்சையும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications