கோஸ்டாரிகாவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி-20 பேர் படுகாயம்

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இரவு ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சான் ஜோஸில் இருந்த சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்ச்சி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது,
இங்கு நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவதால், அதில் இருந்து தப்புவது எப்படி என்று அறிந்துள்ளோம். ஆனால் இந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் பயங்கரமாக இருந்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது என்றனர்.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான கோஸ்டாரிகாவிற்கு, அமெரிக்காவில் இருந்து ஆண்டுதோறும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications