பாய் பிரண்டுடன் உறவு... சந்தேகத்தில் தோழி மீது சுடுதண்ணியை ஊற்றிய பெண்!
கேன்டர்பரி, இங்கிலாந்து: தனது காதலருடன் தனது தோழி உறவு கொண்டு விட்டதாக ஆத்திரமடைந்த ஒரு பெண், தனது தோழி மீது சுடு தண்ணீரை எடுத்து ஊற்றி விட்டார். இதில் அந்தத் தோழி படுகாயமடைந்தார். தற்போது சுடுநீரை ஊற்றிய பெண்ணுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுடுநீரை ஊற்றிய பெண்ணின் பெயர் எடித் விரெடு. இங்கிலாந்தின் கேன்டர்பரி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு தனது தோழி டெரினா ஒமடுக் மீது சந்தேகம் வந்துள்ளது. தனது காதலருடன் டெரினா படுக்கையைப் பகிர்ந்து கொண்டு விட்டதாக அவர் சந்தேகப்பட்டார்.
இதையடுத்து தனது தோழியை வீட்டுக்கு வரவழைத்தார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென முன்கூட்டியே தயாராக வைத்திருந்த சுடிநீரை எடுத்து தோழி மீது ஊற்றி விட்டார். இதில் டெரினா அலறித் துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விரெடு கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைதாகியுள்ள விரெடுவுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில்தான் தனது காதலரைப் பிரிந்தார். ஆனால் பிரிந்த காதலருடன் டெரினா உறவு வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததைத் தொடர்ந்தே அவரை அழைத்து சுடுநீரை ஊற்றி விட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications