இளவரசர் ஹாரிக்கு இருபது நிமிஷம் 'கிஸ்' கொடுத்த பெண் செக் மோசடி வழக்கில் கைது!

2003ம் ஆண்டு 22,000 டாலர் பணத்திற்கு செல்லாத செக்கைக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெக்ஸிகோவுக்கு அவர் விமானம் ஏறச் சென்றபோது அவரைப் போலீஸார் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் இளவரசர் ஹாரி விடுமுறைக்காக முகாமிட்டிருந்தபோது அவருக்கு தான் நிர்வாண கோலத்தில் 20 நிமிடம் தொடர்ந்து இடைவிடாமல் முத்தம் கொடுத்ததாக கேரி ரிச்சர்ட் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
40 வயதாகும் கேரி, சாண்டியாகோவைச் சேர்ந்தவர். இவர் மீது அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணம், ஹாரிசன் நகர கோர்ட்டில் செக் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
அவர் அமெரிக்காவை விட்டு மெக்ஸிகோவுக்குச் செல்லவுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
ஹாரியை முத்தமிட்டது குறித்து கேரி கூறுகையில், இளவரசர் ஹாரி ஒரு ஜென்டில்மேன். அவரும் நிர்வாணத்தில்தான் இருந்தார். நானும் அப்படித்தான் இருந்தார். இந்தக் கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும். ஆனால் ஹாரி அப்படிச் செய்யவில்லை. ஒரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு வேஸ்ட் என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது கலிபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கேரி.












Click it and Unblock the Notifications