இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் அறிவிப்பு- கூட்டணி அரசு அமைகிறது
மட்டக்களப்பு: இலங்கையில் தமிழர்களின் தாயக பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபைக்கான வாக்குப் பதிவின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 19 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத நிலையில் அங்கு கூட்டணி அரசு அமைய வாய்ப்பிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்குகள்:
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1 லட்சத்து 93 ஆயிரத்து 827 வாக்குகள் (30.59 %) பெற்று 11 இடங்கள்
(ராஜபக்சே கட்சி) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 2 இலட்சத்து 44 வாக்குகள் பெற்று (31.58 %) 14 இடங்கள்
(தமிழ் முஸ்லிம்கள் கட்சி) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 வாக்குகள் (20.98 %) பெற்று 7 இடங்கள்
(ரணில் விக்கிரமசிங்க கட்சி) ஐக்கிய தேசியக் கட்சி: 74 ஆயிரத்து 901 வாக்குகள் (11.82 %) பெற்று 4 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
எந்த அரசு அமையும்?
ஆட்சி அமைக்க 19 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழர் கட்சிகளான 11 இடங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 7 இடங்களைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.
அல்லது மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற நிலைமை இருக்கிறது.
மட்டக்களப்பு, திருகோணமலையில் த.தே.கூட்டமைப்பு
மாவட்ட ரீதியான வாக்குகள் விவரம்:
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%) வாக்குகள் பெற்று 6 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 4 இடங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள் பெற்று 1 இடம்
திருகோணமலை மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 இடங்கள்
ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள் பெற்று 3 இடங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள் பெற்று ஒரு இடம்
தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள் பெற்று ஒரு இடம் பெற்றுள்ளன.
அம்பாறை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள் பெற்று 5 இடங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள் பெற்று 3 இடங்கள்
இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள் பெற்று 2 இடங்களைப் பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications