கூடங்குளம் அணுமின் நிலையம்: விடிய விடிய முற்றுகை போராட்டம்-2வது நாளாக நீடிப்பு

முன்னதாக கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கடற்கரையிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆயிரக்கணககான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்தனர்.
தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகருவோம் என்று அறிவித்திருந்தனர். இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இப்பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கடற்கரையிலேயே அமர்ந்து தங்களது முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடற்கரையிலேயே அனைவருக்கும் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
கூடங்குளம் பகுதியில் ஏற்கனவே10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான கிராமத்தினர் முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் தொடர்ந்து பரபரப்பும் பதற்றமும் அங்கு நிலவி வருகிறது.
இதனிடையே கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications