ஜெயலலிதா செப். 13 ம் தேதி ஸ்ரீரங்கம் பயணம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் தொகுதி முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியாகும். இதனையடுத்து அங்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அங்குள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செப்டம்பர் 13 ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
இதன் பின்னர் ஸ்ரீரங்கம் மேலசித்திர வீதி, தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் காலை 11.45 மணி அளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அந்த விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த விழா நடைபெறுவதை முன்னிட்டு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகர் மேயர் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த பயணம் செப்டம்பர் 3 மற்றும் 8 தேதி என இரண்டு முறை முடிவு செய்யப்பட்டு பின்னர் சில காரணங்களினால் செப்டம்பர் 13 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications