கூடங்குளம் போலீஸ் தாக்குதலுக்கு நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்
சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்குமேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் ஒரு சிறு அளவு வன்முறைக்குக்கூட இடந்தராமல் அவர்கள் கட்டுப்பாடோடும் அமைதியோடும் அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தங்களுடைய நியாயமான அச்சத்தைப் போக்குவதற்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்பதனால் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள். 5000 பேருக்கு மேல் பங்கெடுத்துக்கொண்ட இந்த முற்றுகைப் போராட்டமும் அமைதியாக நடந்தது. அமைதியாக போராடிய மக்கள் மீது இன்று மிகக்கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள சனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை. அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. அப்படி இருந்தும் காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதிரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக அமைதி வழியில் போராடி வந்த பொதுமக்கள் மீது இன்று தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டு வீசி, துப்பாக்கிச் சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
பல நூறு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்ட அமைதி வழிப் போராட்டத்தை இத்தகைய அடக்குமுறை மூலம் நசுக்குவது என்பது ஏற்புடைய செயல் அல்ல. காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கடலுக்குள் குதித்த பலரது கதியும் என்ன என்று தெரியவில்லை? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்பதும் தெரியவில்லை. இதேபோல் செய்தியாளர்கள் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது. அமைதிவழியில்தான் நடத்தப்பட்டும் வருகிறது. கடந்த ஓராண்டாகவும் ஜனநாயக வழியில் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அணு உலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்குமுறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது. கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான போலீசாரை திரும்ப வரவழைப்பதுடன் அறவழியில் போராடும் பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் எதிர்கால வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாழ்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications