இடிந்தகரையில் குவிந்த 3000 போலீஸார்... பெரும் பரபரப்பு-பதட்டம்!

கூடங்குளம் போராட்டம் தொடங்கியது முதல் இடிந்தகரைக்குள் போலீஸார் நுழையாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்றுதான் முதல் முறையாக இடிந்தகரை கிராமத்திற்குள் போலீஸார் புகுந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இன்று முற்பகல் வாக்கில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்ததால் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது கூடங்குளம் கடற்கரைப் பகுதி.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக போலீஸார் பெருமளவில் தடியடி நடத்தியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.
இடிந்தகரையை நோக்கி மக்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் இடிந்தகரைக்குள் புகுந்தனர். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு பொதுமக்களை போலீஸார் விரட்டிச் சென்றதால் வழியெங்கும் பதட்டம் காணப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதி மணல் மேடுகளும், முட்புதர்களும் நிறைநத் பகுதி என்பதால் மக்களும், போலீஸாரும் பெரும் சிரமத்துடன் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்களை விடாமல் துரத்திய நிலையில், கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட போலீஸார் இடிந்தகரைக்குள் நுழைந்துள்ளனர்.
ஏற்கனவே இடிந்தகரையில் போலீஸார் இன்று காலை தடியடியில் இறங்கியதால் அங்கும் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக போலீஸார் குவிந்துள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications