அமைச்சரவையை மாற்ற சோனியா முடிவு: திமுகவுக்கு 2 கேபினட் பதவிகள்.. பாலு மீண்டும் அமைச்சர்?

மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார் செய்யும் வகையில், சில மூத்த அமைச்சர்களை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர சோனியா முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயர் துடைக்க நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோக் காந்த் சகாய் ஆகியோரை நீக்கவும் முடிவு செய்துள்ளார்.
அதே போல சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேற்றத்துக்குப்பின் அங்கு காங்கிரஸ் தேய்ந்து போய்விட்டது. இதையடுத்து அம் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியை நீக்கி விட்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை ஆந்திர முதல்வராக்க சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக மூத்த காங்கிரஸ் தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்கிறார்கள். இதனால் பெட்ரோலியத்துறைக்கும், வெளியுறவுத்துறைக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம்.
இந்த அமைச்சரவை மாற்றங்கள் இந்த மாத இறுதியில் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராசாவும், தயாநிதி மாறனும் அமைச்சர் பதவிகளை விட்டு விலக நேர்ந்த நிலையில் அவர்களுக்குப் பதிலாக திமுகவைச் சேர்ந்த வேறு யாருக்கும் பதவிகள் தரப்படவில்லை.
மம்தா பானர்ஜி போல் அல்லாமல் எல்லா விவகாரங்களில் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி மிக ஆதரவாக இருந்து வருவதால், திமுகவுக்கான கேபினட் பதவிகளை மீண்டும் அந்தக் கட்சிக்குத் தர சோனியா முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ராசா, தயாநிதி ஆகியோருக்குத் தரப்பட்ட கேபினட் அமைச்சர் பதவிகள் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படலாம்.
இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரில் இருவரை மத்திய கேபினட் பதவிக்கு கருணாநிதி நியமிக்கலாம் என்கிறார்கள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications