தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது

தமிழகத்தில் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட்டும், மாலை மற்றும் இரவில் 12,000 மெகாவாட்டும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமாளிக்க சென்னையில் 1 மணிநேரமும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.
காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 2,500 முதல் 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின்வெட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்த மாத இறுதியுடன் காற்று சீசன் முடிகிறது. இனி வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து சீசன் துவங்கும். இதனால் இன்னும் சில வாரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரி்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மி்ன்சாரமும் குறைந்த அளவு தான் கிடைக்கிறது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு 2,481 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இந்நிலையில் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க கால தாமதம் ஆகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் மின்தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் மின்தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவும் இம்மாத இறுதியில் குறைந்துவிடும் என்பதால் மின்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் இன்னும் சில வாரங்களில் பல மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் சூழல் உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications