உதயகுமார் மீது கை வைத்தால் இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்: பழ. நெடுமாறன்
நெல்லை: உதயகுமார் மீது கை வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து பாளையில் நடந்த உண்ணாவிரத்ததை முடித்து வைத்து தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 400 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் போராடி வருகினறனர். மகாத்மா காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட கலவரம் வெடித்தது.
அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் மதுரை வரை பாதிப்பு ஏற்படும். லட்சக் கணக்கான மக்கள் அழிவார்கள். தங்களின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வு என்ன ஆகும் என்ற அச்சத்தில் மக்கள் போராடுகின்றனர். வாழ்வாதாரத்திற்காக நடக்கும் போராட்டத்திற்கு ஜாதி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. ஜாதியின் பெயரால் மக்களை இழிவுபடுத்த முடியாது.
மக்களின் அச்சத்தைப் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதயகுமார் தனிப்பட்ட நபர் இல்லை. மக்கள் போராட்டத்தினால் உருவான தலைவர். எனவே அடக்குமுறை மூலம் போராட்டத்தை நசுக்க முடியாது. உதயகுமார் தீவிரவாதி இல்லை. அவர் மீது கை வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியது கணடிக்கத்தக்கது. அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை உடனே வாபஸ் பெற வேண்டும். உதயகுமாரை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications