மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: முதல்வர்களை மாற்றும் காங்கிரஸ்?
டெல்லி: மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது. உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்றும், பிற துறை அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் வைத்திருக்கும் அமைச்சர்களிடம் அவை திரும்பப் பெறப்படும் என்று தெரிகிறது. அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் வயலார் ரவி ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சரானதால் அவரிடம் இருந்த மின் துறை மொய்லிக்கு கொடுக்கப்பட்டது. மேலும் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணத்திற்கு பிறகு அவரிடம் இருந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வயலார் ரவியிடம் கொடுக்கப்பட்டது.
ஆ.ராசா ராஜினாமா செய்த பிறகு தொலைத்தொடர்புத் துறை கபில் சிபலிடம் உள்ளது. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வேலையை கவனிக்க சிலர் கட்சி பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.
திமுக அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் பதவி விலகியதால் இரண்டு காலியிடங்கள் உள்ளன. மேற்கு வங்கம் சென்றிருக்கும் பிரணாப் டெல்லி திரும்பிய பிறகு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது .
அமைச்சரவை மாற்றம் தவிர்த்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
அவ்வாறு மாற்றப்படும் முதல்வர்களை மத்திய அரசில் அல்லது காங்கிரஸ் தலைமையகத்தில் பணியமர்த்த கட்சி மேலிடம் யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications