3 மாதம் தாமதமாக மேட்டூர் அணை இன்று திறப்பு: சம்பா சாகுபடிக்கு தயராகும் விவசாயிகள்

மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ந் தேதி நீர் திறந்துவிடப்படும். இதனால் டெல்டா பாசன விவசாயிகளின் குறுவை சாகுபடி பயனடையும். ஆனால் நடப்பாண்டில் போதுமான நீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இதனால் வழக்கம் போல மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் பொய்த்துப் போனது.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்தி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட தமிழக அரசு வலியுறுத்தியும் மத்திய அரசு உரிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. தமிழக அரசின் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக ஒரு வார காலத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தது. அதற்கு முன்னரே கர்நாடகத்தின் கபினி அணை நிறைவடையும் நிலையில் தமிழகத்துக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய உத்தரவின்படி மேட்டூர் அணையில் இருந்து இன்று பகலில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் மலர்தூவி அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் சம்பா நெல் பாசனத்திற்கு முதல்கட்டமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போதைய தண்ணீர் திறப்பின் மூலம் மேட்டூர் நீர் மின் நிலையத்தில் சுமார் 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் மூலம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 6.95 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கரூர், திருச்சி மாவட்ட பாசன பகுதிகளில் 2.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கடலூர் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும், கல்லணை பாசன பகுதிகளில் 2.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், பெண்ணாறு பாசன பகுதிகளில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும்.
தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து சம்பா நெல் சாகுபடிப் பணிகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications